Tuesday, March 13, 2007


வான கீறலின் வழி
மண்ணில் வழிந்தது சொர்கம்,
வானவில்லாய்...
உன்னுடன் தரையில் நடக்க.

என் தோட்டத்தின் முதல் பூக்களே...
மன்னியுங்கள்.
உங்கள் தவம் வீணாகலாம் !
அவள் பூச்சூடி
நான் கண்டதில்லை...

பெண்ணிலா


வளர்ந்தது பிறை..
உன் முகம் காண,
கண்ட பின் ...
வெட்கி தேய்ந்தது.